Tuesday, December 15, 2009
சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1630:2009-12-14-01-43-37&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
ஆனால், யூதர்கள் அதற்காக முன் எடுத்த முயற்சிகள் வியக்க வைக்கிறது.ஒவ்வொரு தமிழனும் படித்து பிறகு மனதுக்குள் இருத்தி வைக்க வரலாற்றுப்பதிவு.
Thursday, December 10, 2009
Friday, July 17, 2009
பெருந்தலைவர் காமராஜர் புகைப்படத் தொகுப்பு
http://www.dinamani.com/edition/Galleryview.aspx?pageSize=1¤tPage=25
Wednesday, June 10, 2009
தமிழர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங். (9 ஜுன்,2009)
இலங்கை தனது இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அதன் கடமை. நாம் தேவையெனில் ஆதரவளிப்போம். உதவிகளை வழங்குவோம். ஆனால், இது தான் தீர்வு, இதனை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம். - இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன்(10 ஜுன் 2009).
என்ன நடக்கிறது இங்கே?இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நடக்கும் ஆட்சியா?. அல்லது அதிகாரிகளால் தன்னிச்சையாக நடத்தப்படும் ஆட்சியா?.
ஏன் தமிழர்களால் மட்டும் மத்திய அரசையோ அதன் தமிழர் சார்ந்த முடிவுகளில் ஒரு அழுத்தத்தையோ, மாற்றத்தையோ கொண்டு வர முடியவில்லை?. தமிழக மக்களின் உணர்வுகள், யாரால் மட்டுப்படுத்தப் படுகிறது, குழப்பப்படுகிறது?.
த.கண்ணன்
Monday, June 8, 2009
1) இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உதவியால், இந்த போரில் வென்றோம். - சரத் பொன்சேகா
2) இந்தியாவிற்காகவும் இந்த போரினை நடத்தினோம் - ராஜ பக்சே.
3) இந்தியா போரை நிறுத்தச் சொல்லி எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. - மகிந்த ராஜ பக்சே, பசில் ராஜ பக்சே
4) இந்தியா போரில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. - சரத் பொன்சேகா
5) இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் விசாரணை - இந்தியா, இலங்க்கைக்கு ஆதரவாக வாக்களிப்பு.
6) விஜய் நம்பியார், இலங்கைக்கு இருமுறை சென்ற போதும், இந்தியா வழியாகப் பயணம். பயணம் பற்றிய அறிக்கை தாக்க மறுப்பு.
தமிழக ஆட்சி அமர்வுத் தலைவர்கள், மத்திய அரசு, மலையாளிகள் சூழ்ந்த அதிகாரிகள் குழு, தமிழர்களுக்கு எதிரான ஐ.நா அதிகாரிகள் என அனைவரும் இலங்கை அரசோடு செயல் பட்டவர்கள். 20000 தமிழர்கள் படுகொலையில் இவர்களுக்கும் பங்கு உண்டு.
த. கண்ணன்.
Sunday, June 7, 2009
1) திரு. இரகு குறிப்பிட்ட கட்டுரை, கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டதாகும். இது அரசின் அதிகாரப் பூர்வமான இணையத் தளத்தில் வெளிவந்த செய்தி. (http://www.defence.lk/new.asp?fname=20090601_07)
2) "இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட அதிகாரப் பதிர்வுத் திட்டம், இலங்கைக்கு பொருத்தமானதல்ல" -ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா.
3) "ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், 250,000 மக்களை மீட்டுள்ளோம். 20,000 படுகொலை பற்றிய, ஐ.நாவின் அறிக்கைக்கு, பதில் கூறப்போவதில்லை. அது ஒரு கற்பனையில் தயாரிக்கப்பட்டது." - வெளியுறவுத் துறை அமைச்சர், ரோஹித்த போகொல்லாகம. ஐ.நாவின் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி கோபிநாதன், இதற்கு ஆதரவாக, நவிப் பிள்ளையின் கருத்திற்கு எதிராக கூறியதை கவனிக்கவும்.
4) அதிகாரப் பகிர்வு என்ற போர்வையில் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அனைத்து கட்சிக் குழு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.
5) "ராஜபட்சேவால், ஹம்சாவிற்கு வெகுமதியும் பரிசளிப்பும்" - (http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=51213)
6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை என்ன வழியிலேனும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
7) "தமிழர் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்" ஜாதிக ஹெல உறுமய.
8) அனைத்துத் தமிழர்களும், பொது நீரோட்டத்தில் உள்ள, தேசியக் கட்சிகளில் இணைந்து செயல்பட வேண்டும். - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி & ஐக்கிய தேசியக் கட்சி. கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி. டக்ளசுக்கும் அழைப்பு. அனந்த சங்கரியும் இன்னும் சிலரும் தான் பாக்கி.
தமிழருக்கு அதிகாரம் எங்கு, எப்படி கிடைக்கும்?. யாரால் கிடைக்கும்?.
அதிகாரப் பகிர்வு பற்றி தற்போது பேசுவது, முகாம்களில் வசிக்கும் மூன்று லட்ச மக்களின் வாழ்வாதார்வப் பிரச்சனையைத் தட்டிக் கழிக்கும் உத்தியாகும்.
த.கண்ணன். - கருத்துப் பதிவு - "இலங்கையில் அதிகாரப் பகிர்வு: முதல்வரிடம் ப. சிதம்பரம் யோசனை " - தினமணி செய்தி - 7 ஜுன் 2009.
Saturday, June 6, 2009
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இழந்த தமிழர் தம் தாயகத்தை மீட்டெடுத்த வரலாறு, வீர மரபு; அதன் மூலம் எழுப்பிய அரசு, ஆட்சி முறை, நீதி நிர்வாகம், பன்னாட்டுத் தொடர்பு, தொழில், விவசாயம், கல்வி மற்றும் மொழி வளர்ச்சி; இது ஒரு பக்கம்.
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக தமிழரின் விடுதலை, சுயாட்சி, மனித உரிமை; எல்லாம் பறி போய் விட்டது.பழங்கதையாய் போய் விட்டது.
சிங்கள அரசின் கொலை வெறி இன்னும் முடிய வில்லை. 3 இலட்சம் பேரின் முகாம் சிறை. மருந்தின்றி, உணவின்றி மக்களைக் கொல்லல் எனத் தொடர்கிறது. இலங்கையின் தலைமை நீதிபதியின் கூற்றே இதற்கு சாட்சி.
தமிழகத் தமிழர்கள், நாம் என்ன செய்யப் போகிறோம்?. தயவு செய்து, தற்போதைய தமிழரின் வாழ்வுப் பிரச்சனையை, புலிகளோடு முடிச்சு போட்டு, தப்பாதீர்கள். துரோகக் கருத்துக்களைப் உள் வாங்கி, மனிதாபிமானத்திற்கு ஊறு விளைவிக்காதீர்கள்.
த.கண்ணன் - சர்வதேச விசாரணை வேண்டும் - ஆனந்த விகடனின் தலையங்கத்திற்கு என் கருத்து.
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந் தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக் கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடி குண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால்?
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந் தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
தமிழருவி மணியன்
Thursday, June 4, 2009
1) பல ஆண்டுகள்ளுக்கு முன், உகண்டா நாட்டில், குஜராத்திகள் தாக்கப்பட்ட போது, இந்தியாவின் வெளி உறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
2) அரபு நாடுகளில் பெருமாண்மையான மலையாளிகள் வேலை இழந்த போது, NRI அமைச்சர்(கேரளத்தவர்) துணையோடு, அவர்கள் இந்தியா திரும்ப பல முயற்சிகள் செய்யப் பட்டது.
3) சென்ற வாரம் வியன்னாவில்(ஆஸ்திரியா), சீக்கிய மத குருமார் ஒருவர் கொலை செய்யப்பட்ட விடயத்தில், இந்திய வெளி உறவுத் துறை அமைச்சர், கண்டன அறிக்கை விடுகிறார், ஆஸ்திரிய அரசோடு பேசுகிறார். கவனியுங்கள், இதற்க்கு காரணம், ஆஸ்திரிய அரசோ, அடக்குமுறையோ அல்ல. மதத்திற்குள் எழுந்த சாதிப் பிரச்சினை.
4) மெல்பேர்னில் வட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு, இந்திய பிரதம மந்திரி, ஆஸ்திரேலியா பிரதம மந்திரியுடன், இந்திய மாணவர்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.
20,000 தமிழர் படுகொலை, 15,000 பேரை காணவில்லை. முகாமில் இருக்கும் பத்து தமிழரில் ஒருவர் முடம். ஏன் நம் இந்திய அரசு இறையாண்மையாளர்களில் ஒருவர் கூட ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை?.
த.கண்ணன்.
Sunday, May 31, 2009
Saturday, May 30, 2009
புலிகளின் வீழ்ச்சி, பல லட்ச தமிழரிடையே தம் இருப்பைப் பற்றியும், தம் வரலாற்றுக் கடமையைப் பற்றியும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஈழ விடுதலை, ஒரு மக்கள் போராட்டமாக வடிவு கண்டு வருகிறது.
இந்திய, சீனா ஆதிக்கப் போட்டி, மனித படுகொலையை மறைக்க ஆசிய பிரச்சனையாக்கிய இலங்கை அரசு என பல விடயங்கள், மேற்க்கு உலகை வன்மம் கொள்ள வைத்து உள்ளது. இந்த மாற்றம் இனி பல வழிகளில் இலங்கையை பாதிக்க உள்ளது.
த.கண்ணன்.
Friday, May 29, 2009
கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான்,ஆனந்தசங்கரி இன்னும் எத்தனையோ பேர். முப்பது ஆண்டு வரலாற்றில் ஒரு சிறிய தீர்வை கூட இப்படிப் பட்டோரால் சிங்கள அரசிடம் வாங்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எப்படி தில்லியோ, அவர்களுக்கு கொழும்பு அப்படி. இவர்களுக்கு புலிகளும், பிரபகாரனும் தான் கண்ணுக்கு உறுத்தல். இப்போது பார்போம் என்ன செய்யப் போகிறார்கள் என்று
இந்திய சகோதரர்களே, நினைவில் வையுங்கள். கிளிநொச்சியில் ஒவ்வொரு நாட்டின் Embassy க்கும் இடம் அமைய விருந்தது. நேற்று அந்த நிலம் ஒரு நெற்களஞ்சியம்,ஆனால் இன்று, அந்நிலதவர்கள் சோற்றுக்கு கையேந்தும நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
13 - ஆம் அட்டவணையில் ஒரு எழுத்தை கூட திருத்த கூட அனுமதிக்க மாட்டோம் என்று JVP, புத்த பிக்குகள் மற்றும் இனவாத கட்சிகள் கூறி விட்டன. அதிகார பகிர்வுக்கு அடிப்படை இந்த அட்டவணை தான்
த. கண்ணன் - 29 May 2009 -
