ஆனந்த விகடனில் வந்த ஆனைமுத்து வெளியிடும் பெரியார் தொகுப்பு பற்றிய கட்டுரைக்கு, பெரியார் பற்றிய பின்னூட்டதிற்கு எதிர்வினை.
ஆச்சாரியார்களும், ஜீயர்களுக்கும் வக்காலத்து வாங்குவது?. புரிகிறது .. நீங்கள் யார் என்று .. 100 நாள் வேலைத் திட்டத்தில் அதே வேலையைத்தான் பார்க்கவேண்டுமா?. எந்த வேதத்தில் உங்களின் கடல் கடந்த பயணம் புனிதமாக்கப்பட்டது ?.... நித்யானந்தா அப்புறம் தேவநாதன், சங்கராச்சாரி எல்லாம் யாரால்? .. அனுராதா ரமணன் கூறிய குற்றச்சாட்டு என்னவாயிற்று? .. இப்போது கூட ராமகோபலனும் பிஜபியும் தான் நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் .. எந்த பெரியாரிஸ்ட்டும் வாதாடவில்லை.
அடேயப்பா வந்துட்டாங்கையா! ஆகாசப்புளுகு மூட்டைகாரர்கள்! இந்து மதம் தான் தேசிய ஒருமைபாட்டுக்கு உறுதுணையாக இருக்கிறதாம். அப்போ மகாராஷ்ட்ராவில் MNS, ம் ம் அடித்துகிறாங்க RSS? .. ஏன் நேபால் இன்னும் தனி நாடாக இருக்கிறது? இந்தியாவில் இணைக்க வேண்டியது தானே? உதைப்பான் ..
கும்பமேளாவில் தங்களின் "பாவங்களைத்" தொலைக்க முழுக்குப் போட வரும் சங்கராச்சாரிகளுக்கு உத்தர்காண்ட் மாநில அரசு, அவர்கள் முகாம்களை அமைத்துக் கொள்ள நிலங்களை ஒதுக்கி வருகிறது. இதில், காஞ்சி மடம் உள்ளிட்ட போலி சங்கராச்சாரி மடங்களுக்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று துவாரகா பீட சங்கராச்சாரியும், அவருடன் வந்துள்ள "சாதுக்களும்" எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி போன்ற போலிகளுக்கு, நிலம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து, தீக்குளிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்கு கும்பமேளா நிர்வாகத்தின் கூடுதல் அதிகாரி, வி. எஸ். தனிக் என்பவர் உத்ரகாண்ட் அரசு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், ஆதி சங்கரர் நிறுவிய மடமாக காஞ்சி மடம் உள்ளிட்ட போலி மடங்களை அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி மடங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு மட்டுமே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்றும் பதில் கூறியுள்ளார்.
/ / ராமகோபாலனும், சங்காராச்சாரியாரும், பி.ஜெ. பியும் தான் இந்து மதத்தின் பிரதிநிதிகள், அடையாளம் என்று நீங்கள் நினைப்பதைப் போல் ஒரு முட்டாள்த்தனம் ஏதுமில்லை / / .. இங்க பாரடா .. .. புது உண்மையை சரி இந்து மதத்தின் பெருமை சாதாரண பக்தர்களிடம் உள்ளது என்றால், எதற்கு சிறப்பு தரிசன வழி, கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபார யுக்திகள்? .. அங்கு விழும் பணமெல்லாம் வரி ஏய்ப்பு பணம் .. ஏழுமலையான் அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார். இருந்தால் தானே கேட்பதற்கு.
எப்படி ராமகோபாலனும், சங்காராச்சாரியாரும், பி.ஜெ. பியும் இந்து மதத்தின் அடையாளம் இல்லை என்று சொல்லுகிறீர்களோ, அதே போல் தான் திராவிட கட்சி தலைவர்களும் அதன் சார்ந்த ஆட்சியும், பெரியார் தத்துவத்தின் அடையாளங்கள் அல்ல.
/ / தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிதற்கு காரணம், ஊரெங்கும் பள்ளிகள் கட்டிய காமராஜரும், இடஒதுக்கீடு பெற்றுதந்த பெரியவர்களும்தான். / / .. இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெரியவர் பெரியார் தான். இடஒதுக்கீடு கொள்கையின் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.
/ / ஸ்ரீநிவாஸ், முரன்பாடுகளின் முழுவடிவம்தான் பெரியார். / /. பெரியார் செய்தால் அது முரண்பாடு. கோல்வல்கர் செய்தால் அது தேசத் தொண்டா? .. 0 கம்யூனிஸ்ட் முற்போக்கு முகமூடி அணிவீர். ஆனால், சங்கரச்சரியை ஓடிப் போய், மீட்டு வருவீர். தேவானதனைப பற்றி பேசினால் பாதிரியாரைப் பற்றி திசைத் திருப்புவீர். உங்கள் நேர்மை, புனிதம், ஜனநாயகம் எல்லாம் எப்படிபட்டது & எதனுடன் தொடர்புடையது என்று நல்லாவேத் தெரியும்.
70 அல்ல 700 Volumetric போட்டாலும் தகும். கண்டிப்பாக படிப்போம் ... ஸ்ரீநிவாஸ் இப்படி மேலோட்டமாக பேசி பேசி தமிழ் நாட்டில் பெரியாரை பெயர்த்தெடுக்க கடு முயற்சி செய்தனர் ராமகோபலனும், இல கணேசனும் சோவும். ஒன்னும் செய்ய முடிய வில்லை. கடைசியில் வழக்கமான பாணி தான். சமரசம் .. சாஷ்டங்கமா விழுந்தாச்சு. "பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து அனைத்து கருத்துக்களும் சீர்திருத்த கருத்துக்களே" - இல கணேசன். எப்படியோ பெரியாரை, பெரியாழ்வாராக (2) மாற்றாமல் இருந்தால் சரி.
/ / இத்தனையும் செய்த கொடுர சிங்களவர்களை ஐநாவில் வைத்து இந்தியாவே காப்பாற்றியது .......... இந்தியாவே எமது முதன்மை எதிரி / / விகடன் நெறியாளர் என்ன தூங்குகின்றார்களா? ... ஐயோ, ஏன் இந்த சோ கூப்பாடு? .. இந்தியா உதவி செய்ததைப் பற்றி பக்கம் பக்கமா ஆதாரங்களுடன் நிரூபித்தாயிற்று. ராஜபக்சே ஆம் என்றான். மன்மோகன் சிங் மறுக்கவில்லை. ஐ. நா விஜய் நம்பியாரின் நேர்மையை, இந்தியச் சார்பை இன்னர் சிட்டி pressure தொடர்ந்து அம்பலபடுத்தி வருகிறது. இந்து என்கிறீர்! அப்போ அங்கே இறந்தவர்கள் யார்? .. கொன்றவர் யார்? .. கொல்ல உதவியது யார்? .. காஷ்மீர் பண்டிட் சிறு காயம் பட்டால் மட்டும் பதறுகிறீர்? .. என்னையா உங்க நேர்மை, ஜனநாயகம், நாட்டுப்பற்று?
வைக்கம் தொடங்கி 1940 களில் நடத்திய துப்புரவு தொழிலாளர் மாநாடு, தீண்டாமை எதிர்ப்பு மாநாடு என இறுதி வரை எண்ணிலங்கா போராட்டங்கள் நடத்தியுள்ளார். வகுப்புவாரி பிரநிதித்துவம் என்கிற கொள்கையை முதலில் காங்கிரஸ் - க்கும் நீதிக்கட்சிக்கும் சேர்த்த பரிந்துரைத்தார். ஆனால் காங்கிரஸ் மறுத்தது. வகுப்புவாரி பிரநிதித்துவம் என்பது அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளடங்கியதே .... ஆமாம் Rengasubramani நீங்கள் தான் தலித் இல்லையே. எதற்கு முதலை கண்ணீர்?. இந்த சமுகத்தில் கீழ் சாதி என்ற பிரிவை ஏற்படுத்தியவர் யார்? . உங்கள் அதிகாரத்தில் இருக்கும் கருவறைக்கு அழைத்து செல்லுங்களேன்? .. இந்தியா முழுக்க இருக்கும தலித் இயக்கங்கள் அனைத்தும் அம்பேத்கர் படத்துடன் பெரியார் படத்தையும் இணையாக வைப்தே இதற்க்கு சாட்சி.
நேற்று வரை இந்து பாச மழை பொழிந்தீர்கள். எப்போ நீங்கள் எல்லாம் தீடீர் என்று தமிழர்கள் ஆனீர்கள்:?.. எங்களுக்கு ஆச்சாரியரும், பாதிரியாரும் ஒன்று தான். .. தமிழ் நாட்டின் சமுதாய ஆபரேஷன் பற்றி ஆராய்பவர்களே!!. ..பிஜேபி மற்றும் இந்து சார்பு கட்சி ஆண்ட மாநிலங்களில் ஆபரேஷன் ரிசல்ட் என்ன? .. ஒன்றும் வேண்டாம் காஞ்சி மடத்தில் ரிசல்ட் என்ன?
பெரியார் பற்றிய விமர்சனங்கள் என்பது வேறு; அவதூறு என்பது வேறு; இப்போதைக்கு இங்கு அவரைப்பற்றி யார் எதனால் சொல்கிறார்கள் என்பதே முக்கியம்.
Monday, March 29, 2010
Tuesday, March 16, 2010
தோழன் லெப்.கேனல் அமுதாப்
போர் நிறுத்த உடன்பாடு சிங்கள படைகளால் மீறப்பட
ஆரம்பித்த காலத்தில் சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை
அணிகளின் தளபதி தோழன் லெப்.கேனல் அமுதாப்
தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம்.
ஆரம்பித்த காலத்தில் சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை
அணிகளின் தளபதி தோழன் லெப்.கேனல் அமுதாப்
தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம்.
Subscribe to:
Posts (Atom)
