Sunday, May 31, 2009
தமிழ் உணவாளர்களே, நேர்மையாளர்களே, பல பெயர்களில், பல மொழிகளில் இங்கு இடம் பெரும் துரோகக் கருத்துக்கள், ஒரே நபரால் எழுதப்படுபவையே. இதனையே ஒரு வேலையாக, ஏவலாக செய்துகொண்டிருப்பவர். பல வகைகளில் திரிபுகளை செய்கிறார். அதன் தொடர்ச்சியே, இசுலாமிய நபர் பெயரில் எழுதுவதும், இந்தியப் பற்றாளர் போல் எழுதுவதும். வலுவான கருத்துக்களை, ஆதாரத்துடன் நாம் தொடர்ந்து பதிவு செய்வதே அதற்கான தக்க பதிலடியாக இருக்கும். ---த.கண்ணன் 5/31/2009 7:45:00 PM தினமணியில் ஒரே வாசகர், பல பயர்களில் துரோகக் கருத்துக்களை எழுதுவதைப் பற்றி.
Saturday, May 30, 2009
இந்திய இறையாண்மையாளர்களே, சிங்கள வருடிகளே, சிங்களத்தை வணங்கும் முடிகளே, இலங்கை தேசப்பற்றாளர்களே, சோனியாவின் மாந்தர்களே, சொரணை கெட்டு சுயமரியாதை தொலைத்த உடன்பிறப்புகளே, அம்மா கழக அடிப்பொடிகளே, தமிழர் பிரச்சனை இன்று உலக அரங்கிற்கு சென்று விட்டது. உலகின் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் பிரச்சனையாக உரு மாறி விட்டது. புலம் பெயர்ந்த தமிழர் ஈழம் நோக்கிய சரியான அரசியலை முன் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
புலிகளின் வீழ்ச்சி, பல லட்ச தமிழரிடையே தம் இருப்பைப் பற்றியும், தம் வரலாற்றுக் கடமையைப் பற்றியும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஈழ விடுதலை, ஒரு மக்கள் போராட்டமாக வடிவு கண்டு வருகிறது.
இந்திய, சீனா ஆதிக்கப் போட்டி, மனித படுகொலையை மறைக்க ஆசிய பிரச்சனையாக்கிய இலங்கை அரசு என பல விடயங்கள், மேற்க்கு உலகை வன்மம் கொள்ள வைத்து உள்ளது. இந்த மாற்றம் இனி பல வழிகளில் இலங்கையை பாதிக்க உள்ளது.
த.கண்ணன்.

Friday, May 29, 2009
தமிழரின் உயிர், வாழ்க்கை, தீர்வு என அத்தனையும் உலக நாடுகளின் பூகோள அரசியலின் விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டது. இலங்கையின் குள்ள நரி வலையில் இந்தியா விழுந்து விட்டது. பலன் விரைவில் சீனா வழி வர இருக்கிறது. அப்போது, நாராயணனும், மேனனும், நம்பியாரும் இருக்க போவது இல்லை. காலம் ஒரு நல்ல நிலை கண்ணாடி. வரலாறும், காலமும் இந்த உலகின் பாரா முகத்தை, இழி செயலை பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னி நிலமும் மக்களும் இனி இந்த உலகை, இந்தியாவை, இந்தியத் தமிழ் அரசியல் வாதிகளை நம்பப் போவது இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இனி பிறக்கும் ஈழ அரசியல் போர், பிறரின் அல்லது பிற இனத்தின் அழிவைக் கண்டு இரக்கப் படப் போவது இல்லை. மனிதாபிமானத்தை பார்க்க போவதில்லை.
கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான்,ஆனந்தசங்கரி இன்னும் எத்தனையோ பேர். முப்பது ஆண்டு வரலாற்றில் ஒரு சிறிய தீர்வை கூட இப்படிப் பட்டோரால் சிங்கள அரசிடம் வாங்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எப்படி தில்லியோ, அவர்களுக்கு கொழும்பு அப்படி. இவர்களுக்கு புலிகளும், பிரபகாரனும் தான் கண்ணுக்கு உறுத்தல். இப்போது பார்போம் என்ன செய்யப் போகிறார்கள் என்று
இந்திய சகோதரர்களே, நினைவில் வையுங்கள். கிளிநொச்சியில் ஒவ்வொரு நாட்டின் Embassy க்கும் இடம் அமைய விருந்தது. நேற்று அந்த நிலம் ஒரு நெற்களஞ்சியம்,ஆனால் இன்று, அந்நிலதவர்கள் சோற்றுக்கு கையேந்தும நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
13 - ஆம் அட்டவணையில் ஒரு எழுத்தை கூட திருத்த கூட அனுமதிக்க மாட்டோம் என்று JVP, புத்த பிக்குகள் மற்றும் இனவாத கட்சிகள் கூறி விட்டன. அதிகார பகிர்வுக்கு அடிப்படை இந்த அட்டவணை தான்
த. கண்ணன் - 29 May 2009 -

கருத்து பதிவர்கள், செய்தியைச் சார்ந்து பதிந்தால் நல்லது. அது தான் நாகரிகம். இன்றைய செய்தி '20,000 தமிழர்களை இலங்கை அரசு கொன்றதைப் பற்றியது... அப்பட்டமான உண்மை இப்போது வெளி உலகுக்கு வந்துள்ளது. இதைதான் அந்த மக்கள் அழுது, கெஞ்சி கூத்தாடி மூன்று மாதங்களாக இந்த உலகை வேண்டினர். ஐ.நா உட்பட யாரும் இந்த மனித அவலத்தை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அதற்கான விலை 20000 உயிர் பலி...முகாம்களில் பத்து பேரில் ஒருவர் முடம். ஒரு கூடாரத்தில் நான்கு பேர் இருக்க வேண்டிய இடத்தில பத்து பேர். வலுக்கட்டாயமாக சிறுவர்கள், பெற்றோர்களிடமிருந்து பறிப்பு. இளம்பெண்கள் கடத்தல்.....குடிநீரும், உணவும் மருந்தும் அற்ற கொடிய சிறையில் 3 லட்சம் மக்கள். யார் இந்த பேய் அரசை, பிணம் திண்ணும் கொடியவர்களை தட்டிக் கேட்டபது?.......இன்று காவல் தெய்வங்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்களோ, கயவர்களின் கூடாரத்தில். போர் முடிந்து 3 வாரங்கள் ஆகியும், இந்த தலைவர்கள் இடம் பெயர்க்கப்பட்ட மக்களுக்காக இதுவரை, ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. Helicaptor பயணம். அரசியல்வாதி போல் முகாம் விசிட்....தமிழரின் விடிவு வெள்ளி எப்போது உதிக்கும்? --த.கண்ணன் 5/29/2009 7:03:00 PM - Dinamani.
Subscribe to:
Posts (Atom)