Friday, May 29, 2009
கருத்து பதிவர்கள், செய்தியைச் சார்ந்து பதிந்தால் நல்லது. அது தான் நாகரிகம். இன்றைய செய்தி '20,000 தமிழர்களை இலங்கை அரசு கொன்றதைப் பற்றியது... அப்பட்டமான உண்மை இப்போது வெளி உலகுக்கு வந்துள்ளது. இதைதான் அந்த மக்கள் அழுது, கெஞ்சி கூத்தாடி மூன்று மாதங்களாக இந்த உலகை வேண்டினர். ஐ.நா உட்பட யாரும் இந்த மனித அவலத்தை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அதற்கான விலை 20000 உயிர் பலி...முகாம்களில் பத்து பேரில் ஒருவர் முடம். ஒரு கூடாரத்தில் நான்கு பேர் இருக்க வேண்டிய இடத்தில பத்து பேர். வலுக்கட்டாயமாக சிறுவர்கள், பெற்றோர்களிடமிருந்து பறிப்பு. இளம்பெண்கள் கடத்தல்.....குடிநீரும், உணவும் மருந்தும் அற்ற கொடிய சிறையில் 3 லட்சம் மக்கள். யார் இந்த பேய் அரசை, பிணம் திண்ணும் கொடியவர்களை தட்டிக் கேட்டபது?.......இன்று காவல் தெய்வங்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்களோ, கயவர்களின் கூடாரத்தில். போர் முடிந்து 3 வாரங்கள் ஆகியும், இந்த தலைவர்கள் இடம் பெயர்க்கப்பட்ட மக்களுக்காக இதுவரை, ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. Helicaptor பயணம். அரசியல்வாதி போல் முகாம் விசிட்....தமிழரின் விடிவு வெள்ளி எப்போது உதிக்கும்? --த.கண்ணன் 5/29/2009 7:03:00 PM - Dinamani.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment