இந்தியத் தமிழ்ச் சகோதரரர்களே, உங்கள் மனசாட்சிக்கு ஒரு சில வினாக்கள்.
1) பல ஆண்டுகள்ளுக்கு முன், உகண்டா நாட்டில், குஜராத்திகள் தாக்கப்பட்ட போது, இந்தியாவின் வெளி உறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
2) அரபு நாடுகளில் பெருமாண்மையான மலையாளிகள் வேலை இழந்த போது, NRI அமைச்சர்(கேரளத்தவர்) துணையோடு, அவர்கள் இந்தியா திரும்ப பல முயற்சிகள் செய்யப் பட்டது.
3) சென்ற வாரம் வியன்னாவில்(ஆஸ்திரியா), சீக்கிய மத குருமார் ஒருவர் கொலை செய்யப்பட்ட விடயத்தில், இந்திய வெளி உறவுத் துறை அமைச்சர், கண்டன அறிக்கை விடுகிறார், ஆஸ்திரிய அரசோடு பேசுகிறார். கவனியுங்கள், இதற்க்கு காரணம், ஆஸ்திரிய அரசோ, அடக்குமுறையோ அல்ல. மதத்திற்குள் எழுந்த சாதிப் பிரச்சினை.
4) மெல்பேர்னில் வட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு, இந்திய பிரதம மந்திரி, ஆஸ்திரேலியா பிரதம மந்திரியுடன், இந்திய மாணவர்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.
20,000 தமிழர் படுகொலை, 15,000 பேரை காணவில்லை. முகாமில் இருக்கும் பத்து தமிழரில் ஒருவர் முடம். ஏன் நம் இந்திய அரசு இறையாண்மையாளர்களில் ஒருவர் கூட ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை?.
த.கண்ணன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment