பல நூறு உயிர்த்தியாகங்கள்; இருபத்தைந்து ஆயிரம் போராளிகள் வீர மரணங்கள்; ஒரு இலட்சம் அப்பாவி மக்கள் படுகொலை; இது ஒரு பக்கம்.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இழந்த தமிழர் தம் தாயகத்தை மீட்டெடுத்த வரலாறு, வீர மரபு; அதன் மூலம் எழுப்பிய அரசு, ஆட்சி முறை, நீதி நிர்வாகம், பன்னாட்டுத் தொடர்பு, தொழில், விவசாயம், கல்வி மற்றும் மொழி வளர்ச்சி; இது ஒரு பக்கம்.
இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக தமிழரின் விடுதலை, சுயாட்சி, மனித உரிமை; எல்லாம் பறி போய் விட்டது.பழங்கதையாய் போய் விட்டது.
சிங்கள அரசின் கொலை வெறி இன்னும் முடிய வில்லை. 3 இலட்சம் பேரின் முகாம் சிறை. மருந்தின்றி, உணவின்றி மக்களைக் கொல்லல் எனத் தொடர்கிறது. இலங்கையின் தலைமை நீதிபதியின் கூற்றே இதற்கு சாட்சி.
தமிழகத் தமிழர்கள், நாம் என்ன செய்யப் போகிறோம்?. தயவு செய்து, தற்போதைய தமிழரின் வாழ்வுப் பிரச்சனையை, புலிகளோடு முடிச்சு போட்டு, தப்பாதீர்கள். துரோகக் கருத்துக்களைப் உள் வாங்கி, மனிதாபிமானத்திற்கு ஊறு விளைவிக்காதீர்கள்.
த.கண்ணன் - சர்வதேச விசாரணை வேண்டும் - ஆனந்த விகடனின் தலையங்கத்திற்கு என் கருத்து.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment